தினமும் 1ஜிபி டேட்டா ஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் Vs ஐடியா – ஒப்பீடு

Ads

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், அடிப்படை டேட்டா திட்டங்கள் அனைத்திலும் 1ஜிபி டேட்டா என்பது நிரத்தர அம்சமாக மாறியுள்ளது. ஜியோ, வோடபோன்,ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்களின் 1ஜிபி டேட்டா திட்டத்தை ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம்.

ஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் Vs ஐடியா

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் மிக கடுமையான சவால்கள் நிறைந்த துறையாக மாறிய டெலிகாம் துறையில் போட்டியாளர்களும் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்குவதனை அடிப்படை திட்டமாக இணைக்க தொடங்கியுள்ளனர்.

ஜியோ பிளான்

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள ஹேப்பி நியூ இயர் 2018 திட்டங்களில் ரூ.199 கட்டணத்தில் 28 நாட்களுக்கு 1.2 ஜிபி டேட்டா, ரூ.309 கட்டணத்தில் 49 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா, ரூ.399 கட்டணத்தில் 70 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா , ரூ.459 கட்டணத்தில் 84 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் ரூ.499 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 91 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் அனைத்து திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்புகள், ஜியோ ஆப்ஸ் பயன்பாடு இலவசமாக வழங்கப்படுவதுடன், தினசரி உயர்வேக டேட்டா தீர்ந்த பிறகு 128 Kbps வேகத்தில் இணையத்தை அனுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர்டெல் பிளான்

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு டேட்டா திட்டங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில் ஜியோவுக்கு எதிராக ரூ.199 கட்டணத்தில் 28 நாட்களுக்கு 1ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா பிளான் தவிர ரூ.448 திட்டம் 70 நாட்களுக்கும், ரூ.509 திட்டம் 84 நாட்களுக்கும் 1ஜிபி டேட்டா பயன்பாடு வழங்கப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் அனைத்து திட்டங்களிலும் தினசரி பயன்பாட்டுக்கு 250 நிமிடங்கள் அல்லது 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். தினசரி பயன்பாடு அல்லது வாரத்தின் இலவச அழைப்புகளை கடந்த பிறகு ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்திலும், மற்ற நெட்வொர்க் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா என வசூலிக்கப்பட உள்ளது.

வோடபோன் பிளான்

வோடபோன் நிறுவனமும் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் 3ஜி அல்லது 4ஜி டேட்டா திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி பயன்பாட்டுக்கு 1ஜிபி டேட்டா வழங்கும் மூன்று திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.

ரூ.196 கட்டணத்தில் வழங்கப்படும் பிளான் 28 நாட்கள் செல்லுபடியாகும், ரூ.458 பிளான் 70 நாட்களும் ரூ.509 டேட்டா பிளான் 84 நாட்கள் செல்லுபடியாகும்.

வோடபோன் வழங்கும் வரம்பற்ற அழைப்புகள் என்பது தினசரி பயன்பாட்டுக்கு 250 நிமிடங்கள் அல்லது 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். தினசரி பயன்பாடு அல்லது வாரத்தின் இலவச அழைப்புகளை கடந்த பிறகு அனைத்து அழைப்புகளுக்கும் ஒரு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐடியா செல்லூலார் பிளான்

ஜியோ,ஏர்டெல், வோடபோன் போன்றே ஐடியா நிறுவனமும் தினசரி பயன்பாட்டுக்கு 1ஜிபி டேட்டா வழங்கும் மூன்று திட்டங்களை செயற்படுத்துவதுடன், வரம்பற்ற அழைப்புகள் பிரிவில் தினசரி பயன்பாட்டுக்கு 250 நிமிடங்கள் அல்லது 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். தினசரி பயன்பாடு அல்லது வாரத்தின் இலவச அழைப்புகளை கடந்த பிறகு ஒரு நிமிடத்திற்கு கட்டணம் 1 பைசா என வசூலிக்கப்பட உள்ளது.

ரூ.179 பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருப்பதுடன், ரூ.449 பிளான் 70 நாட்களுக்கும், ரூ.509 பிளான் 84 நாட்கள் வேலிட்டி கொண்டதாக கிடைக்க உள்ளது.

பொதுவாக மேலே வழங்கப்பட்டுள்ள அனைத்து டேட்டா திட்டங்களும் அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டரின் அதிகார்வப்பூர்வ ஆப் அல்லது இணையத்தை பயன்படுத்தலாம்.

Comments

comments