மொபைல் எண்னுடன் ஆதார் எண் இணைக்க புதிய வழிமுறைகள்

Ads

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை வருகின்ற டிசம்பர் 1 முதல் செயற்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.

மொபைல்-ஆதார்

மத்திய அரசின் அறிவிப்பின் படி பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதார் கார்டு எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு ரீடெயிலரிடம் சென்று இணைக்கும் வகையிலான வழிமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருகின்ற டிசம்பர் 1 முதல், ஆமார் எண்ணை இணைக்க மூன்று விதமான சுலபமான வழிமுறைகளை செயற்படுத்த உள்ளது. அதன் விபரம் பின் வருமாறு ;-

  1. மொபைல் எண் வாயிலாக ஐவிஆர்எஸ் ((IVRS)) எனப்படும் அழைப்பு வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  2. OTP எனப்படுகின்ற ஒரு முறை கடவுச்சொல் கொண்டு மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது.
  3. இறுதியாக, ஆதார் எண்ணை இணைக்க பிர்த்தியேக ஆப் ஒன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல், ஏர்செல்,ஐடியா போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரிடம் ஆதார் எண் இணைக்க மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற உள்ளது.

உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Comments

comments