டாக் நான்-ஸ்டாப் : அன்லிமிடேட் அழைப்புகளை பெற வோடபோன் ரூ.196 பிளான்

Ads

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்புகளை ரூ.196 கட்டணத்தில் வழங்குகின்றது.

வோடபோன் ரூ.196 பிளான்

சமீபத்தில் வோடபோன் டெலிகாம் நிறுவனம் அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா பயன்பாட்டுக்கு வழங்குவதுடன் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் ரூ.199 கட்டணத்தில் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு டாக் நான்-ஸ்டாப் வித் வோடபோன் அன்லிமிடெட் கால்ஸ் என்ற பெயரில் ரூ.196 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன் 28 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது.

இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு அதாவது 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். தினசரி பயன்பாடு அல்லது வார பயன்பாட்டிற்கு பிறகு அழைப்புகளின் கட்டணம் நிமிடத்திற்கு 30 பைசா என வசூலிக்கப்படும்.

முன்னணி ஏர்டெல் நிறுவனம் தங்களுடைய குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு ரூ.198 கட்டணத்தில் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்.டி.டி அழைப்புகள், நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ், 1 ஜிபி/ ஒருநாள், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வழங்குகின்றது.

Comments

comments