119 கோடியை தொட்ட தொலைதொடர்பு சந்தாதாரர்கள் – மார்ச் 2017

Ads

இந்தியாவில் மிகவேகமாக வளர்ந்து வருகின்ற தொலை தொடர்பு துறை மார்ச் மாத முடிவில் 119 கோடி வாடிக்கையாளர்களை எட்டியுள்ளது. வயர்லெஸ் வாடிக்கையாளர் எண்ணிக்கை 117 கோடியாக உயர்ந்துள்ளது.

டெலிகாம் சந்தாதாரர்கள் – மார்ச் 2017

கடந்த பிப்ரவரி மாத முடிவில் 1.18 பில்லியன் வாடிக்கையாளராக இருந்த தொலை தொடர்பு துறையில் மார்ச் மாதந்திர முடிவில் 1.19 பில்லியனாக உயர்வுபெற்றுள்ளது. ஏப்ரல் மாத முடிவு வெளிவரும் பொழுது மொத்த இந்திய தொலை தொடர்பு சந்தாதாரர்கள் எண்ணிகை 120 கோடியை எட்டியிருக்கும்.

மெட்ரோ மற்றும் நகரபுறங்களில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை ஜனவரி மாதத்துடன் ஒப்பீடுகையில் 0.2 சதவிகித வளர்ச்சி பெற்று 69.29 கோடியாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாத முடிவில் நகர்புற சந்தாதாரர் எண்ணிக்கை 69.22 கோடியாக இருந்தது.

கிராம்புறங்களில் தொலை தொடர்பு சேவையை பெறுவோர் எண்ணிக்கை பிப்ரவரி மாத முடிவில் 49.64 கோடியாக இருந்த நிலையில் மிக வேகமாக வளர்ச்சியாக 1.05 சதவீத வளர்ச்சி பெற்ற 50.01 கோடியாக மார்ச் மாதத்தில் உயர்ந்துள்ளது. மேலும் வயர்வழி தொலைபேசி சேவை பெறுவோரின் எண்ணிக்கை 24.4 மில்லியனாக உள்ளது.

எண்ணை மாற்றாமல் தொலை தொடர்பு சேவை வழங்குநரை மாற்றும் எம்என்பி சேவை கோரியவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதம் 60 லட்சமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக எம்என்பி கோரியவர்களின் எண்ணிக்கை கர்நாடக மாநிலத்தில் அதிகமாக உள்ளது.

வயர்லெஸ் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை – மார்ச் 31

  • ஏர்டெல் 49.13 கோடி
  • வோடபோன் 37.72 கோடி
  • ஐடியா  24.70 கோடி
  • ரிலையன்ஸ் ஜியோ 14.01 கோடி

 

Comments

comments