ரூ.100 வரையிலான ரீசார்ஜூக்கு முழு டாக்டைம் : வோடபோன் எம்-பேசா

ரூ.30-ரூ.100 வரையிலான ரீசாஜ் செய்யும் அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு முழு டாக்டைம் வழங்க உள்ளதாக வோடபோன் எம்-பேசா அறிவித்துள்ளது. 

Ads

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் தனது ப்ரீபெய்டு பயனாளர்கள் ரூ.30 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ் செய்தால் முழு டாக்டைம் வழங்க உள்ளது.

வோடபோன் எம்-பேசா

வோடபோன் நிறுவனத்தின் எம்-பேசா மொபைல் வாலட் சேவையில் பணம் அனுப்புதல், பெறுதல் , பணம் செலுத்துதல் உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் 1,40,000 ஏஜென்ட்களுடன் 16.4 மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது.

எம்-பேசா சேவையில் உள்ள வாடிக்கையாளர்கள் அல்லது எம்-பேசா ரீசார்ஜ் செய்யும் இடங்களில் ரூ.30 முதல் ரூ.100 வரையிலான தொகையில் ரீசார்ஜ் செய்யும் அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் முழுமையான் டாக்டைம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

எத்தனை முறை வேண்டுமானலும் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ள, இந்த ரீசார்ஜ் பேலன்ஸ் வரம்பற்ற வேலிடிட்டி கொண்டது என்பதனால் எப்பொழுது வேண்டுமானலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ரீசார்ஜ் செய்வது எவ்வாறு ?

வோடபோன் எம்-பேசா இணையதளம் அல்லது M-Pesa app அல்லது *400# USSD முறையை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

தமிழக வோடபோன் 3ஜி/4ஜி பயனாளர்கள் ரூ.401 கொண்டு ரீசார்ஜ் 84ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments