இ-காமர்ஸ் இனையதளங்களில் பிரசத்தி பெற்ற அமேசான் இந்தியா தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அமேசான் பிரைம் (Amazon Prime) என்றால் என்ன ? அமேசான் பிரைம் பயன்படுத்தவது எவ்வாறு என தெரிந்துகொள்ளலாம்.

அமேசான் பிரைம் என்றால் என்ன ? பயன்படுத்துவது எவ்வாறு ?

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அமேசான் பிரைம் சர்வீஸ் வருடத்திற்கு ரூ.499 அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் = அமேசான் ஃபுல்ஃபீல்லடூ + ஃபாஸ்ட் டெலிவரி (Amazon Prime = Amazon Fulfilled + Free Fast Delivery’) என விளக்கம் தரப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரைம் என்றால் என்ன ?

அமேசான் பிரைம் என்றால் வாங்கும் பொருட்களை  எவ்விதமான கூடுதல் டெலிவரி கட்டணமும் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம்,  மேலும் ரூ.499 விலைக்கு குறைவான பொருட்களுக்கு ரூ.40 டெலிவரி கட்டணமாக உள்ளதை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் தவிரக்கலாம்.  ஆனால் அன்றைய தினமே டெலிவரி விரும்பும்பிரைம் வாடிக்கையாளர்கள் ரூ.50 கட்டணமாக செலித்த வேண்டும். ஆனால் மற்றவற்கள் ரூ.150 வரை செலுத்த வேண்டி இருக்கும்.

மேலுமம் முக்கியமாக அனைத்து பொருட்களுக்கும் பொருந்தாது பிரைம் பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அமேசான் பிரைம் உறுப்பினர்கள் மற்ற வாடிக்கையாளர்களை விட அரை மணி நேரம் முன்னதாக சிறப்பு டீல்களை பெறலாம். Prime Early Access என்ற பில்டரை பயன்படுத்தி பெறலாம்.

இதுகுறித்து அமேசான் இந்திய பிரிவின் துனை தலைவர் அமித் அகர்வால் குறிப்பிடுகையில் அமேசான் பிரைம் வாயிலாக வாடிக்கையாளர்கள் மிக விரைவான வழியில் பொருட்களை பெற்றுக்கொள்ள வகையிலும் எவ்விதமான குறைவான விலையுள்ள பொருட்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அமேசான் பிரைம் அறிமுக விலையாக ரூ.499 ஆகும் ஆனால் உண்மையான விலை ரூ.999 ஆகும். மேலும் அமேசான் பிரைம் வீடியோ சர்வீஸ் வரும்காலத்தில் வழங்கப்பட உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரைம் சர்வீஸ் கட்டணம் $99 (ரூ.5946) சலுகை விலையில் $39 (ரூ.2340) ஆகும்.

அமேசான் பிரைம்  அறிமுக சலுகையாக 60 நாட்களுக்கு எவ்விதமான கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் இலவசமாக சேவையை பெற கீழுள்ள படத்தை அழுத்தவும்..

 amazon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here