உலகின் பிரசத்தி பெற்ற மெசேஜ் செயலியான வாட்ஸ் அப் பல வசதிகளுடன் மிக விரைவாக செய்திகளை அனுப்புவதற்கு பெறுவதற்கும் ஏற்ற வகையிலும் படங்கள் , வீடியோ போன்ற வசதிகள் பலவற்றை தன்னகத்தே பெற்றுள்ள உங்கள் வாட்ஸ் அப் மெதுவா செயல்படுகின்றதா ?

1 பில்லியன் மக்களுக்கு மேல் விரும்பி பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயிலில் நாள்தோறும் 100 மில்லியன் அழைப்புகள் கணக்கில்லா குறுஞ்செய்திகளுடன் உலகின் முக்கிய செய்திகளை விநாடிகளில் பகிர்ந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
1. டெலிட் மெசேஜ் மற்றும் டேட்டா
அதிகப்படியான மெசேஜ் , படங்கள் மற்றும் வீடியோ என பல தகவல்களை தினமும் பெறுவதனால் உங்கள் வாட்ஸ் அப் செயலின் மெம்மரி வசதி அதிகரிக்கும் என்பதனால் வாட்ஸ்அப் மெதுவாகும். எனவே தேவையற்ற செய்திகள் , அதிகப்படியான படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை நீக்கிவிடுங்கள்..

2. கிளியர் கேச்

உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ் அமைப்பில் உள்நுழைந்து அதில் உள்ள தற்காலிக ஃபைல்கள் மற்றும் ஜங்க ஃபைல்களை தினமும் கிளியர் செய்து பராமரித்து வாருங்கள்.

3. ஸ்பீட் அப் ரேம்

அதிகப்படியான மெம்மரி பெற்று நீங்கள் பயன்படுத்தாத ஆப்ஸ் போன்றவற்றை நீக்கிவிடுங்கள். மேலும் கிளியர்கேச் போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்திய தேவையற்ற தற்காலிக ஃபைல்கள் மற்றும் ஜங்க் ஃபைல்களை நீக்கி விடுங்கள்.

4. தகவலை மாற்றுங்கள்

உங்கள் வாட்ஸ்அப் செயலில் உள்ள தேவையான தகவல்களை  தனியாக ஃபோல்டர் திறந்து அதில் மாற்றிக்கொள்ளுங்கள். தினமும் உங்கள் கணக்கின் தகவல்களை பேக்கப் எடுத்து மின்னஞ்சல் அல்லது வேறு ஒன்றின் தரவில் சேமித்துகொள்ளுங்கள்.

5. காப்பக செய்திகள் 

காப்பகம் செய்திகள் (Archive Messages) செய்வதனால் அதிகப்படியான சுமையில்லாமல் உங்கள் வாட்ஸ்அப் இயல்பாக இயங்கும்.

மேற்கண்ட 5 குறிப்புகளை கொண்டுஉங்கள் வாட்ஸ்அப் செயலியை வேகமாகவும் துல்லியமாகவும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் வாட்ஸ்அப் ஸ்பீட் பத்தி கருத்துக்களை கீழுள்ள கமெண்ட்ஸ் பெட்டியில் பதிவு பண்ணுங்க.. மேலும் நீங்கள் கடைபிடிக்கும் வழிமுறை என்ன மற்றவர்களுக்கு உதவுங்க…