சமூக வலைதளத்தினை அடிப்படையாக கொண்டே பல குற்றங்கள் நாளொரு மேனியாக பல உருவங்களில் வளர்ந்து வரும் நிலையில் பேஸ்புக் , டிவிட்டர் , கூகுள் ப்ளஸ் , வாட்ஸ்அப்  மேலும் பல.., சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடாத 10 செயல்கள் என்ன என்பதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடாத 10 செயல்கள் இதோ..!

சமூக வலைதளங்களில் நண்பர்கள் பட்டியல் பெரிய எண்ணிக்கையில் இருக்க வேண்டும் ,அதிக குழுக்களில் இணைய வேண்டும் , அதிகப்படியான பக்கங்களை விரும்ப வேண்டும் போன்ற சமூக வலைதளங்களின் அதிக பிரிவுகளை பயன்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணத்தை முதலில் தவிருங்கள்.

1. தனியுரிமை தகவல்கள்

அதிகப்படியான தனிப்பட்ட தகவல்களை நீங்கள் பகிர்ந்து கொள்பவர் எனில் உங்களுடைய செயல்களின் உங்களின் பல விடயங்களை நீங்களே வெளியிடுவதனால் ஆன்லைன் திருடர்கள் உங்களை பற்றிய அனைத்து விபரங்களையும் சேகரித்து அதன் வாயிலாக உங்களுடைய தனியுரிமையை பாதிக்கும்  வகையிலான செயல்களில் ஈடுபடுவார்கள். விநாடிக்கு விநாடி உங்களை தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்த்துவிடுங்கள்.

சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடாத 10 செயல்கள் இதோ..!

2. பாஸ்வோடு விபரம்

தனிப்பட்ட சொந்த விசயங்களை நீங்கள் அதிகம் பகிர்ந்தால் ஆன்லைன் ஹேக்கர்கள் நிச்சியமாக உங்களுடைய தனிப்பட்ட தகவலின் வாயிலாக உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை (பாஸ்வோடு) கண்டுபிடித்து உங்கள் கணக்கில் தவறானவற்றை புகுத்தி விடுவார்கள். மேலும் உங்கள் நண்பர்களிடன் பாஸ்வோடு கொடுப்பதனை தவிர்த்து விடுங்கள்.

3. மொபைல் எண்

வாட்ஸ்அப் குழு என்ற பெயரில் அழைப்பு  விடுக்கும் இடங்களில் , ஆபாச தன்மை கொண்ட புகைப்படம் தலைப்பிட்டு வெளியிடப்படும் இடங்களில் எல்லாம் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் சார்ந்த விடயங்களை வெளியிட்டால் உங்களை முட்டாளாக்க ஒரு கூட்டமே உலகயளவில் இயங்குகின்றது. சமூக வலைதளங்களில் நீங்கள் பகிரும் மொபைல் எண் உங்களுடைய வங்கி சார்ந்த மற்றும் முக்கிய ஆவனங்களுக்கு அடிப்படை எண் என்றால் ஆபத்துக்கு அளவு என்பதே இல்லை. ஆம் சிம் குளோனிங் மோசடியின் வாயிலாக போலியான சிம் கார்டுகளை  உங்கள் எண்ணில் உருவாக்கி உங்கள் வாழ்க்கையை நீங்களே பாழாக்கி கொள்ளாதீர்கள்.

சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடாத 10 செயல்கள் இதோ..!

4. முகவரி

உங்கள் இல்லத்தின் முகவரி , தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் முகவரி சார்ந்த தகவல்களை தவிர்க்கலாம். முகவரி சார்ந்த விடயங்களில் முக்கிய நகரத்தின் பெயரை மட்டுமே பயன்படுத்துங்கள்.

5. சுற்றுலா

சுற்றுலா , திருவிழா , குடும்பம் சார்ந்த விழாக்களுக்கு குடும்பத்துடன் செல்வதாகவோ வேறு எந்த வகையிலோ இல்லத்தில் யாரும் இல்லை என்பது போன்ற தகவல்களை பகிரவேண்டாம். உங்கள் இல்லத்தில் களவாட நீங்களே வாய்ப்புள்ளதாக தெரிவிக்க வேண்டாம்.

5. புகைப்படங்கள் 

நம்முடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்துவதே பிரதான நோக்கமாக செயல்பட்டு வரும் சமூக தலைமுறையினருக்கு  ஆபத்து அதிகமாக உள்ளது. பெண்கள் தங்கள் படங்களை முற்றிலும் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.

6. புதுமைபெண்

பாரதி கண்ட புதுமை பெண்னாக இருக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் பாரதி காலத்தில் பேஸ்புக் , டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இல்லை என்பதனை மறக்க வேண்டாம். உங்களின் தனிப்பட்ட புகைபடங்களை கொண்டு மார்ஃபிங் செய்து தவறான இடங்களில் பயன்படுத்துவது , தவறான பெயரில் தகவலை பரப்புவது போன்றவற்றை உங்களால் தடுக்க வாய்ப்பே இல்லை என்பதனால் பெண்களே உங்களின் புகைப்படங்களை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். உங்கள் புகைப்படங்கள்  தவறான வழியில் பயன்படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக புகார் கொடுங்கள்.

7. குழந்தைகளின் படங்கள்

உங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்வதனை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகளின் படங்களை கொண்டு குற்றசெயல்களில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது.

சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடாத 10 செயல்கள் இதோ..!

8. வேலை பற்றி தகவல்கள்

நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ,அவர்கள் மீதான அதிருப்தி போன்றவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தால் மிக இலகுவாக அவரை சென்றுவிடும் என்பதனை மறக்க வேண்டாம். மேலும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர் பற்றிய தகவல்களை தவிர்ப்பது நல்லது.

9. தவறான செய்திகள்

ஆபாச தன்மை சார்ந்த செய்திகள் ,அதிகார்வப்பூர்வமற்ற செய்திகள் , அரசியல் சார்ந்த தவறான தகவல்கள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ளாதீர்கள். இணையதளங்களில் கானும் செய்திகளை உங்கள் செய்தி ஆக நீங்கள் தெரிவிக்க வேண்டுமென காப்பி செய்து பேஸ்ட் செய்தால் சில தளங்களில் உள்ள மால்வேர் உங்கள் கணக்கின் தகவல்களை திருடிவிடும்.

சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடாத 10 செயல்கள் இதோ..!

10. கவனம்

யாரென்று தெரியாத நபர்களின் புகைப்படங்கள், வீடியோ , செய்திகளை பகிர்ந்து கொள்வதனை தவிர்த்துவிடுங்கள்..

சமூக வலைதளங்களில் பாதுகாப்பாக செயல்படுங்கள்… பொழுதுபோக்கு , செய்திகளை கொண்டு செல்லும் தளம் என்பதற்கான தளமாக பயன்படுத்துங்கள்.

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here