1ஜி, 2ஜி ,3ஜி ,4ஜி சேவைகளை தொடர்ந்து களமிறங்க காத்திருக்கும் 5ஜி சேவையை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்திலே 5ஜி என்றால் என்ன ? என்ற இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1ஜி , 2ஜி ,3ஜி 4ஜி மற்றும் 5ஜி இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன அறிந்து கொள்ளலாம்.

5ஜி

தொலைதொடர்பு சார்ந்த சேவைகளில் 5வது தலைமுறையை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் காலம் வரும் வாய்ப்புகள் உருவாக தொடங்கியுள்ள நிலையை 5வது தலைமுறை அலைவரிசை பற்றி சில முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

G என்றால் Generation

5G குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்னர் நடைமுறையில் உள்ள 2ஜி ,3ஜி மற்றும் 4ஜி பற்றி மேலாட்டமாக சில தகவல்களை சேகரிக்கலாம் வாங்க…

 

1G

1ஜி எனப்படும் ஒன்றாம் தலைமுறை சேவை 1980 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட அனலாக் முறையை சார்ந்த தொலை தொடர்பு சேவையாகும். இந்த சேவையில் அழைப்புகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

டேட்டா திறன்: 2Kbps
நுட்பம்: அனலாக் வயர்லெஸ்
தரம் : AMPS
சேவை: அழைப்புகள் மட்டும்
அலைவரிசை: 800 to 900MHz

2G

2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை சேவை 1991 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் முறையை சார்ந்த தொலை தொடர்பு சேவையாகும். இந்த சேவையில் அழைப்புகள் மற்றும் டேட்டா மட்டுமே மேற்கொள்ளப்படும். உலகின் பெரும்பாலான நாடுகளில் 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா ,கனடா, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் 2ஜி சேவை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த சில வருடங்களில் பெரும்பாலான நாடுகளில் 2ஆம் தலைமுறை முடிவுக்கு வரவுள்ளது.

டேட்டா திறன்: 10Kbps
நுட்பம்: டிஜிட்டல் வயர்லெஸ்
பிரிவு :  CDMA, TDMA, GSM
சேவை: அழைப்புகள் மற்றும் டேட்டா மட்டும்
அலைவரிசை: 850MHz to 1900MHz(GSM) மற்றும் 825MHz to 849MHz (CDMA)

2ஜி சேவையில் மேம்பட்ட பிரிவாக அறிமுகம் செய்யப்பட்டதே 2.5ஜி மற்றும் 2.75ஜி ஆகும்.

2.5ஜி

2.5ஜி சேவை என்றால் ஆரம்ப காலத்தில் டேட்டா பயன்படுத்தியவர்களுக்கு தெரியக்கூடிய ஒன்று ஜிபிஆர்எஸ் (GPRS -G) அதுவே 2.5ஜி அலைவரிசை ஆகும்.

டேட்டா திறன்: 200Kbps
நுட்பம்: டிஜிட்டல் வயர்லெஸ்
பிரிவு :  TDMA, GSM
சேவை: அழைப்புகள், டேட்டா மற்றும் MMS மட்டும்
அலைவரிசை: 850MHz to 1900MHz

2.75ஜி

2ஜி சார்ந்த மொபைல்களில் டேட்டாவை தொடர்புகொள்ளும் பொழுது E என்ற எழுத்து தொடங்கும் சேவை ஆனது எட்ஜ் (EDGE-E) என அழைக்கப்படும் 2.75ஜி சேவை ஆகும்.

டேட்டா திறன்: 200Kbps
நுட்பம்: GPRS
பிரிவு :  CDMA, GSM
சேவை:பேக்கேட் சுவிட்ச்
அலைவரிசை: 850MHz to 1900MHz

3ஜி

சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ள மிக முக்கியமான ஒன்றாக விளங்கும் 3வது தலைமுறை சேவையில் 2ஜி போன்றே 3.5ஜி மற்றும் 3.75ஜி போன்றவைகள் உள்ளன. முதற்கட்டமாக 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டேட்டா தொடங்கும்பொழுது 3ஜி எழுத்து தோன்றும்.

டேட்டா திறன்: 384Kbps
நுட்பம்: Broadband/IP technology, FDD and TDD
பிரிவு : CDMA,WCDMA,UMTS,CDMA2000
சேவை: வாய்ஸ் டேட்டா , வீடியோ கால் , இணையம்
அலைவரிசை: 1.6 to 2.5 GHz

3.5 ஜி

3ஜி சேவையின் மேம்பட்ட செயல்பாடான 3.5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையில் நீங்கள் டேட்டா பயன்படுத்தும் பொழுது H என்ற எழுத்து தோன்றும்.

டேட்டா திறன்: 2Mbps
நுட்பம்: GSM/3GPP
பிரிவு : HSDPA/HSUPA
சேவை: உயர் வேக வாய்ஸ் டேட்டா , வீடியோ கால் , இணையம்
அலைவரிசை: 1.6 to 2.5 GHz

3.75 ஜி

3.5ஜி சேவையின் மேம்பட்ட செயல்பாடான 3.75ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையில் பெரும்பாலும் டேட்டா கார்டுகளே கிடைக்கும்.

டேட்டா திறன்: 30 Mbps
நுட்பம்: 1XEVDO
பிரிவு : HSDPA/HSUPA
சேவை: உயர் வேக இணையம் மற்றும் மல்டி மீடியா
அலைவரிசை: 1.6 to 2.5 GHz

4ஜி

2008 ஆம் ஆண்டு முதன்முறையாக தொடங்கப்பட்ட 4ஜி சேவை பரவலாக பல்வேறு நாடுகளில் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றது. இணையம் சார்ந்த பயன்பாட்டிற்கு ஏற்ற வாகையில் உருவாக்கப்பட்டுள்ள 4வது தலைமுறை அலைவரிசையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

டேட்டா திறன்:  2Mbps முதல் 1Gbps
நுட்பம்: IP , LAN/WAN/PAN மற்றும் WLAN
பிரிவு : OFDMA,MC-CDMA,network-LMPS
சேவை: உயர் தர இணையம் மற்றும் ஹெச்டி சேவை
அலைவரிசை: 2 to 8 GHz

5ஜி

2018 ஆம் ஆண்டில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ள 5வது தலைமுறை அலைவரிசை சேவை முழுமையான பயன்பாட்டிற்கு 2020 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

டேட்டா திறன்:  ஆரம்ப வேகம் 1Gbps
நுட்பம்: IP ,LAN/WAN/PAN மற்றும் WLAN
பிரிவு : OFDMA,MC-CDMA,network-LMPS
சேவை: உயர் தர ஹெச்டி இணைய சேவை
அலைவரிசை: 3 to 300 GHz

இதுதவிர 6ஜி மற்றும் 7ஜி சேவைகளும் சில நாடுகளில் செயற்கைகோள் தொடர்பான சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.