ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் - ஏர்செல் திவால் ?தமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் மற்றும் இளம் ஜோடிகளின் நெட்வொர்க் என பிரபலமாக விளங்கிய ஏர்செல் டெலிகாம் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சந்தையிலிருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏர்செல் டவர் பிரச்சனை

ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் - ஏர்செல் திவால் ?

தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் 1.50 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஏர்செல் நிறுவனம் , கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக தொலைத் தொடர்பு கோபுரங்களை வாடகைக்கு வழங்கி வரும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டி கடன் தொகையின் காரணமாக கடந்த வாரத்தில் மூன்று நாட்களுக்கு டவர் பிரச்சனையால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பின்னடைவை தந்தது.

மீண்டும் டவர் பிரச்சனை

வருகின்ற வியாழன் அதாவது நாளை முதல் மீண்டும் டவர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளிவந்த தகவல் குறித்து ஏர்செல் நிறுவனத்தின் தமிழக பிரிவு தலைவர் சங்கரநாராயணன் கூறியதாவது:

”ஏர்செல் நிறுவனத்தின் சேவை நாளை மீண்டும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே ஏர்செல் வாடிக்கையாளர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

செல்போன் கோபுரங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு ஏர்செல் நிறுவனம் சில நூறு கோடிகள் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த நிலுவை பாக்கி இருப்பதால் தமிழ்நாட்டில் இருக்கும் 9,500-க்கும் மேற்பட்ட செல்லிடப் பேசி டவர்களில் 7,000-க்கும் மேற்பட்ட டவர்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ஏர்செல் நிறுவனத்துக்கும் இணைப்பு சேவை அளிக்கும் டவர் நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏர்செல் செலுத்த வேண்டியதாக இருக்கும் தொகைக்கும், டவர் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடும் தொகைக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பே பல வட்டாரங்களில் ஏர்செல் டெலிகாம் சேவை நிறுத்தப்பட்டது. அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என டவர் நிறுவனங்கள் வலியுறுத்துவதால் பிரச்சினை மேலும் சிக்கலாகியுள்ளதாக என தெரியவந்துள்ளது.

ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் - ஏர்செல் திவால் ?

ஏர்செல் திவாலாதாக அறிவியுங்கள்

தற்பொழுது அதிகரிக்கும் கடன் நெருக்கடியின் காரணமாக தங்களை திவால் நிறுவனம் என்று அறிவித்து விடுமாறு ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் (National Companies Law Tribunal – NCLT) மனு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் ரூ.15,500 கோடிக்கும் அதிகமாக கடன் சுமை இருப்பதால் தங்களை திவால் என்று அறிவித்து விடுமாறு, ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது என்று தெரிகிறது.

அதே நேரம் நடப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்குள் மாற்று ஏற்பாடுகளை ஏர்செல் நிறுவனம் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்திற்குதொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் - ஏர்செல் திவால் ?

எந்த நெட்வொர்க் மாறலாம் ?

தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவை நடைமுறை அதிகரித்து வருவதனால் 4ஜி ஆதரவு பெற்ற நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற மொபைல் போன்களில் ஒற்றை சிம் கார்டிற்கு மட்டுமே 4ஜி ஆதரவை வழங்கும் மொபைல் போன் கிடைப்பதனால், ஜியோ சேவையை முன்பே பயன்படுத்தி வருபவர்கள் இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பயன்படுத்துவது சிரமம் ஆகும்.

விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கவிருப்பதனால் பிஎஸ்என்எல் நிறுவனக்கு மாறுவது ஏற்றதாக அமைந்திருக்கும், இதனை தொடர்ந்து வோடபோன் , ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களும் சந்தையில் முக்கிய பங்காற்றி வருகின்றது.

மொபைல் நம்பர் போர்ட் வழிமுறை விபரம்

உங்கள் மொபைல் எண்ணிலிருந்து ‘PORT’ என எழுதிய மொபைல் நெம்பருடன் 1900 என்ற எண்ணுக்கு மேசேஜ் பன்னுங்க.  (எ.கா) PORT 98xxxxxx00′ to 1900

உங்களுக்கு UPC கோடு (Unique Portability Code) கிடைக்கும்.

உங்கள் அருகாமையில் உள்ள மொபைல் அங்காடி அல்லது அங்கீகாரம் பெற்ற டெலிகாம் சேவை வழங்குபவர்களின் வாயிலாக உங்கள் ஆதார் (eKYC) மூலம் அடையாளத்தை சமர்ப்பியுங்கள்.

சில நாட்களுக்கு பிறகு உங்கள் முந்தைய சேவை நிறுவனத்தில் இருந்து விடை பெற்று புதிய சேவைக்கு மாறலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here