உலாவிகளில் மிக முக்கியமான கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ், ஒப்ரா மற்றும் சஃபாரி போன்ற பிரபலமான பிரவுசர்களில் ஆட்டோ பிளே வீடியோ வசதியை நிறுத்துவது எப்படி ? என்பதனை இங்கே காணலாம்.

பிரவுசரில் தொல்லையான ஆட்டோ பிளே வீடியோ வசதியை நிறுத்துவது எப்படி ?

ஆட்டோ பிளே வீடியோ

 • இணையதளங்கள் தற்பொழுது ஹெச்டிஎம்ல் 5 நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
 • முந்தைய தளங்களில் ஃபிளாஷ் கொண்டு ஆட்டோ பிளே வசதி செயல்பட்டு வந்தது.
 • உலகயளவில் 45 சதவீத பயனர்கள் குரோம் பிரவுசரை பயன்படுத்துகின்றனர்.

பிரவுசரில் தொல்லையான ஆட்டோ பிளே வீடியோ வசதியை நிறுத்துவது எப்படி ?

ஃபிளாஷ் வகையில் பிளே ஆகும் செயல்பாட்டை கொண்ட வீடியோவினை அடோப் ஃபிளாஷ் செயல்பாட்டை நிறுத்தினால் தானாக நின்று விடும் நிலையில் இருந்து வந்தது. தற்பொழுது Html5 நிரலி கொண்டு வடிவமைக்கப்படும் ஆட்டோ பிளே வீடியோ வசதியை நிறுத்துவது எவ்வாறு என காணலாம்.

கூகுள் க்ரோம்

க்ரோம் உலாவி பயன்படுத்துபவர்கள் க்ரோம் ஸ்டோரிலிருந்து எக்ஸ்டென்சன் ஒன்றை நிறுவினால் போதுமானதாகும்.

க்ரோம் பிரவுசரில் உள்ள டிஸேபிள் எச்டிஎம்ல் 5 ஆட்டோ பிளே என்ற  Disable HTML5 Autoplay எக்ஸ்ன்டன்செனை நிறுவினால் போதுமானதாகும்.

ஃபயர்ஃபாக்ஸ்

இந்த உலாவியில் இரு வகையான முறையை பயன்படுத்தலாம் ஒன்று அட்ஆன் முறை ஃபயர்பாக்சில் உள்ள addon பகுதியில் FlashStopper  தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் அல்லது கீழுள்ள வழிமுறையை பயன்படுத்துங்கள்…

 1. பிரவுசரை திறந்த பின்னர்
 2. about:config என அட்ரஸ் பாரில் டைப் செய்து என்டர் கொடுக்கவும்
 3. Click I accept the risk என்பதற்கு அனுமதியுங்கள்
 4. media.autoplay.enabled என்ற வார்த்தை தேடுங்கள்..
 5. இதனை media.autoplay.enabled இரு முறை க்ளிக் செய்து படத்தில் உள்ளதை போன்ற False செய்யுங்கள்..

பிரவுசரில் தொல்லையான ஆட்டோ பிளே வீடியோ வசதியை நிறுத்துவது எப்படி ? பிரவுசரில் தொல்லையான ஆட்டோ பிளே வீடியோ வசதியை நிறுத்துவது எப்படி ?

ஓப்ரா

இந்த பிரவுசரில் க்ரோம் போலவே உள்ள டிஸேபிள் எச்டிஎம்ல் 5 ஆட்டோ பிளே என்ற  Disable HTML5 Autoplay எக்ஸ்ன்டன்செனை நிறுவினால் போதுமானதாகும்.

சஃபாரி உலாவி

 1. சஃபாரி உலாவியை மூடிவதற்கு cmd+Q அல்லது டாப் மெனுவில் அமைந்துள்ள Safari > Quit Safari தேர்ந்தெடுங்கள்.
 2. டெரிமினலை திறந்து cmd + space bar என கொடுத்து Terminal  என எழுதி என்டர் கொடுக்கவும்
 3. இந்த கமென்டை டெர்மினல் பகுதியில் பேஸ்ட் செய்யவும், defaults write com.apple.Safari com.apple.Safari.ContentPageGroupIdentifier.WebKit2AllowsInlineMediaPlayback -bool false.
 4. திரும்ப இந்த கமென்டை தரவும் defaults write com.apple.Safari WebKitMediaPlaybackAllowsInline -bool false.

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்  உலாவிகளில் ஃபிளாஷ் வீடியோவை எளிதாக நிறுத்தலாம்.. ஆனால் எச்டிஎம்ல் 5 கொண்ட ஆட்டோ பிளே வசதிகளுக்கு சற்று கடினமே..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here