வாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி ?

இந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம் எளிதாக சிலிண்டர் முன்பதிவினை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.

Indane Gas Booking – இண்டேன் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் பொதுவான IVRS எண் 7718955555 என அறிவிக்கப்பட்டது. அடுத்தப்படியாக, வாட்ஸ் ஆப் மூலமாக பதிவு செய்ய 7588888824 என்ற எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இன்டேன் கேஸ் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து Refill என டைப் செய்து அனுப்பினால் போதும். சிலிண்டர் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ் மூலமாக பதிவு செய்ய விரும்புபவர்கள் 7718955555 என்ற எண்ணுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலமாக IOC என டைப் செய்து > STD code உடன் டிஸ்ட்ரிபியூட்டர் தொடர்பு எண் >> வாடிக்கையாளர் நுகர்வோர் எண் இணைத்து அனுப்பினால் பதிவு செய்யப்படும்.

HP Gas Booking – நாட்டின் மற்றொரு முன்னணி கேஸ் நிறுவனமான ஹெச்பி தனது வாடிக்கையாளர்களுக்கு, 9222201122 என்ற எண்ணிற்கு சிலிண்டர் புத்தகத்தின் எண்ணை அனுப்பினால், சிலண்டர் முன்பதிவு கோரிக்கை பதிவு செய்யப்பட்டு, விலை உட்பட டெலிவரி விபரங்கள் வாட்ஸ்ஆப் மூலம் கிடைக்கும்.

Bharat Gas Booking – பாரத் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உருளையை பெறுவதற்கு , 1800224344 எண்ணை வாட்ஸ்ஆப் மூலமாக பயன்படுத்தி Hi, Hello என டைப் செய்த உடன் பாரத் கேஸ் புக்கிங் எண்ணை அனுப்பினால் முன்பதிவு கோரிக்கை பதிவு செய்யப்பட்டு, விலை உட்பட டெலிவரி விபரங்கள் வாட்ஸ்ஆப் மூலம் கிடைக்கும்.

குறிப்பாக,  வாட்ஸ்ஆப் மூலம் பதிவு செய்ய தற்போது அனைத்து சமையல் எரிவாயு உருளையை பெற குறிப்பாக நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட எண்ணில் மட்டுமே கிடைக்கும் என்பதனை உறுதி செய்துள்ளது.