சியோமி எம்ஐ மேக்ஸ் 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – ஜூலை 18 முதல்

Ads

வருகின்ற ஜூலை 18ந் தேதி புதிய சியோமி Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவாய்ப்புகள்  உள்ளதாக சியோமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ மேக்ஸ் 2

எம்ஐ பிராண்டின் மேக்ஸ் மாடலின் வெற்றியை தொடர்ந்து அறிமுக்கம் செய்யப்பட்டுள்ள மேக்ஸ் 2 கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வரும் 18ந் தேதி புதிய மொபைலை அறிமுகம் செய்ய உள்ளதாக சியோமி இந்தியா பிரிவு தலைவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#BigIsBack 😎😎 Mi fans, mark the date: 18th July. Super excited about this one ☺️

A post shared by Manu Kumar Jain (@manukumarjain) on

டிசைன் & டிஸ்பிளே

6.44 அங்குல அகலமான டிஸ்பிளே வசதியுடன் கூடிய சியோமி Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 1080×1920 பிக்சல் தீர்மானத்தை கொண்டு மிக நேர்த்தியான மெட்டல் பாடியுடன் வடிவமைக்கப்பட்டு அசத்தலாக விளங்குகின்றது.

பிராசஸர் & ரேம்

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்டு செயல்படுகின்ற ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் பெற்ற 64ஜிபி மற்றும் 128ஜிபி என இருவிதமான உள்ளடங்கிய சேமிப்பை பெற்றதாக கிடைக்கின்றது.

கேமரா

Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் உயர்தர படங்கள் மற்றும் வீடியோ பெறும் வகையில் பின்புறத்தில் சோனி IMX386 சென்சார் உடன்1.25 மைக்ரான் பிக்சல் மற்றும் PDAF ஆதரவுடன் கூடிய இரட்டை எல்இடி ஃபிளாஷ் பெற்ற 12 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ப்யூட்டிஃபிகேஷன் மோட் வசதியுடன் கூடிய செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஆப்ஷனை ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனுடன் கூடிய 5300mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற மொபைல் அதிகபட்சமாக 68 சதவிகித சார்ஜிங் பெற ஒரு மணி நேரம் மட்டுமே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்கள் வரை பேட்டரி தாங்கும் திறனை கொண்டதாக உள்ளது.

மற்றவை

ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை பின்னணியில் வடிவமைக்கப்பட்ட MIUI 8 இயங்குதளத்தில் செயல்படுகின்ற மேக்ஸ் 2 கருவியில் துனை விருப்பங்களாக  4G எல்டிஇ, VoLTE, Wi-Fi 802.11/b/g/n, புளூடூத், ஜிபிஎஸ், மற்றும் யூஎஸ்பி டைப் போர்ட் சி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

விலை விபரம்

சீனாவில் ரூ. 16,000 விலையில் 64ஜிபி மாடலும் , ரூ. 19,000 விலையில் 128ஜிபி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இதே விலையில் விற்பனைக்கு வரக்கூடும்.

சியோமி மீ மேக்ஸ் 2 நுட்ப விபரம்
வசதிகள் சியோமி மீ மேக்ஸ் 2
டிஸ்பிளே 6.44 இன்ச் ஹெச்டி
பிராசஸர் குவால்காம் 625 SoC
ரேம் 4GB
சேமிப்பு 64GB/128GB
பின் கேமரா 12MP
முன் கேமரா 5MP
ஓஎஸ் ஆண்ட்ராய்டு 7.0 அடிப்படை MIUI 8
பேட்டரி 5300mAh
ஆதரவு இருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை
விலை ரூ. 16,000 /ரூ.19,000

 

Comments

comments