சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சியோமி நிறுவனம், பண்டிகை காலத்தில் 8.5 மில்லியனுக்கும் மேற்பட்ட டிவைஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலத்தில் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்கள், 4 லட்சம் மீ LEd டிவிக்கள் மற்றும் 2.1 மில்லியன் மற்ற பொருட்கள் மற்றும் எ\உதிரி பாகங்கள், மீ எக்கோசிஸ்டம் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சியோமி இந்தியா நிறுவன பிரிவு மற்றும் ஆன்லைன் விற்பனை துறை தலைவர் ரகு ரெட்டி தெரிவிக்கையில், இந்தாண்டு 6 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 8.5 மில்லியன் டிவைஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவன தயாரிப்பு அளித்து வரும் வரவேற்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிளிக்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இணையதளத்தில் முறையே ரெட்மீ நோட் 5 புரோ மற்றும் ரெட்மீ 6A ஸ்மார்ட் போன்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. இத்துடன் மீ ஏர் புரிபையர் 2S-களும் வழக்கத்தை விட 4.5 மடங்கு அதிக டிமாண்ட் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சியோமி நிறுவனம் கடந்த அக்டோபர் 9 மற்றும் நவம்பர் 8 ஆகிய நாட்களில் ஸ்மார்ட் போன், மீ LED டிவி, வேர்எமில்ஸ், மீ ரூட்டர்கள் மற்றும் மீ எக்கோ சிஸ்டம் போன்ற பொருட்கள் என ஒரு பில்லியன் மதிப்பு கொண்ட விற்பனை இலக்கை எட்டியுள்ளது. இந்த பொருட்கள் சியோமி நிறுவனத்தின் இணையதளத்திலும், மீ ஹோம் மற்றும் பார்னர்கள் மூலமாகவும் விற்பனை நடந்துள்ளது என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.