இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து சீனாவை மையமாக கொண்ட சியோமி நிறுவனத்தின் துனை பிராண்டாக லான்மி (lanmi) என்ற பெயரில் சியோமி 5எக்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சியோமி 5X ஸ்மார்ட்போன்

சியாமி நிறுவனம் புதிதாக லான்மி (Lanmi) எனும் பெயரில் புதிய பிராண்டு ஒன்றை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்கப்படுகின்ற நிலையில் வரும் ஜூலை 26ந் தேதி சியோமி X1 அல்லது லான்மி X1 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை வெளியிடலாம்.

தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் லான்மி எக்ஸ்1 மொபைல் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் பெற்றதாக 5.5 அங்குல டிஸ்பிளே பெற்று 4ஜிபி ரேம் கொண்டதாகவும், கேமரா துறையில் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் பெற்ற இரட்டை கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் பல்வேறு வசதிகளை கொண்டதாக வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பேஸ் மாடல் விலை ரூ. 19,000 என தொடங்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் அடுத்தபடியான 6ஜிபி ரேம் பெற்ற மாடல் ரூ. 20,000 க்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சியோமி தற்போது சியோமி மற்றும் எம்ஐ போன்ற பிராண்டுகளில் மொபைல்களை விற்பனை செய்து வரும் நிலையில் நடுத்தர பிரிவு மொபைல்களுக்கு லான்மி என்ற பிராண்டை தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

Image: MyDriver