சீனாவின் ஜியோமி அல்லது சியோமி நிறுவனத்தின் ஜியோமி Mi 6 ஃபிளாக் ஷிப் ஸ்மார்ட்போனில் செராமிக் எடிசன் என்ற வேரியன்டில் 18 காரட் கோல்டு பதிக்கப்பட்ட்டுள்ளது.

ஜியோமி Mi 6

  • 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி பெற்ற செராமிக் எடிசன் வந்துள்ளது.
  • செராமிக் எடிசன் மாடல் விலை ரூ. 28,200 ஆகும்.
  • இந்தியாவில் எம்ஐ 6 மொபைல் அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

மிக நேர்த்தியான் வளைந்த டிசைன் அமைப்பை பெற்றதாக விளங்குகின்ற எம்ஐ 6 மாடலில் மூன்று விதமான வகைகளில் வந்துள்ள நிலையில், உயர்ரக மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள செராமிக் எடிசன் எனப்படுகின்ற மாடலில் இடம்பெற்றுள்ள பின்புற இரண்டு 12 மெகாபிக்சல் கேமராவில் 18 காரட் தங்க வளையத்தை பெற்றுள்ளது.

மேலும் பின்பகுதியில் இடம்பெற்ற கடினமான செராமிக் பேனல்கள் தினசரி பயன்பாட்டின் பொழுது ஏற்படுகின்ற தேய்மானம் மற்றும் கிறல்கள் போன்றவற்றை தடுக்கும் வகையிலான அம்சத்தை கொண்டதாக விளங்குகின்றது.

5.15 அங்குல முழு ஹெச்டி திரையுடன், ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி உடன் செயல்படுகின்ற 6ஜிபி ரேம் பெற்ற மாடலாக வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவிதமான சேமிப்பு ஆப்ஷனுடன் கிடைக்க உள்ளது.

ஹெச்டி படங்கள் மற்றும் 4K வீடியோ பதிவு செய்யும் வகையில் இரண்டு 12 எம்பி இரட்டை பிரைமரி கேமராவில் 4-axis OIS வசதியுடன் வழங்குகின்றது. மேலும் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஜியோமி எம்ஐ6 ஸ்மார்ட்போன் விலை பட்டியல் (சீனா)

  • ஜியோமி Mi 6 6GB+64GB – 2499 Yuan (தோராயமாக ரூபாய் 23,400)
  • ஜியோமி Mi 6 6GB+128GB 2899 Yuan (தோராயமாக Rs. 27,200).
  • ஜியோமி எம்ஐ செராமிக் பிரிமியம்  6GB+128GB 2999 Yuan (தோராயமாக Rs. 28,200)

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான எந்த அறிவிப்புகளையும் ஜியோமி வெளியிடவில்லை. இந்திய சந்தையில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.