சீனாவின் பிரசத்தி பெற்ற நிறுவனத்தின் சியோமி Mi 6 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.15 அங்குல முழு ஹெச்டி திரையுடன் வந்துள்ளது.

சியோமி Mi 6 ஸ்மார்ட்போன்

  • 6 ஜிபி ரேம் பெற்ற ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி பெற்றுள்ளது.
  • 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவிதமான சேமிப்புடன் வந்துள்ளது.
  • இரு 12 மெகாபிக்சல் இரட்டை கேமரா வசதியை பின்புறதில் பெற்றுள்ளது.

பலதரப்பட்ட செய்திகளுக்கு பிறகு அதிகார்வப்பூர்வமாக சீனாவில் விற்பனைக்கு வந்துள்ள எம்ஐ 6 ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.

5.15 அங்குல முழு ஹெச்டி திரையுடன், ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி உடன் செயல்படுகின்ற 6ஜிபி ரேம் பெற்ற மாடலாக வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் mi6 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவிதமான சேமிப்பு ஆப்ஷனுடன் கிடைக்க உள்ளது.

உயர்தரத்தில் ஹெச்டி படங்கள் மற்றும் 4K வீடியோ பதிவு செய்யும் வகையில் இரண்டு 12 எம்பி இரட்டை பிரைமரி கேமராவில் 4-axis OIS வசதியுடன் வழங்குகின்றது. மேலும் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4G LTE (வோல்ட்இ), வை-ஃபை, ப்ளூடுத், NFC, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப் சி போன்றவற்றை பெற்றதாக உள்ளது.3050mAh பேட்டரி ஆப்ஷனுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.

சியோமி எம்ஐ6 ஸ்மார்ட்போன் விலை பட்டியல் (சீனா)

  • சியோமி Mi 6 6GB+64GB – 2499 Yuan (தோராயமாக ரூபாய் 23,400)
  • சியோமி Mi 6 6GB+128GB 2899 Yuan (தோராயமாக Rs. 27,200).
  • செராமிக் பிரிமியம் 2999 Yuan (தோராயமாக Rs. 28,200).